Designed by Iniyas LTD
கனடாவின் பிரதமராக பதவியேற்றார் ஜஸ்டின் ரூடோ!
கனடாவின் 23ஆவது பிரதமராக ஜஸ்டின் ரூடோ (JUSTIN TRUDEAU) பொறுப்பேற்றுக்கொண்டார். கனடா மக்கள் எந்த மாற்றத்தை எதிர்பார்த்து வாக்களித்தார்களோ அதனைக் கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்துள்ளார்.
தனது தலைமையிலான அமைச்சரவையில் பெண்களுக்கும் அதிக முக்கியத்துவம் அளித்துள்ள பிரதமர் TRUDEAU, வெளிப்படைத்தன்மை நிறைந்த ஆட்சியை வழங்குவதில் உறுதியாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.