தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மேட்டூர் அணை முன்பு தேமுதிக சார்பில் கண்டன ஆர்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மேட்டூர் அணை முன்பு தேமுதிக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற உள்ளது. இது குறித்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:–  vijayakanth

கடந்த 1984 ஆம் அண்டு, அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். ஆட்சியில் “தோணி மடுவு“ திட்டம் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்பு,  தமிழகத்தில் மாறிமாறி ஏற்பட்ட ஆட்சிகள் காரணமாக தோணி மடுவு திட்டம் புதைகுழியில் தளளப்பட்டது.   மேலும், மேச்சேரி ஏரியிலிருந்து இயற்கையாக அமைந்துள்ள நீர்வழிப்பாதைகளை பயன்படுத்தி, சரபங்காஆறு, திருமணிமுத்தாறு, வசிஷ்ட நதிகளுடன் காவிரி நதியின் உபரி நீரை இணைக்க வேண்டும்.

அதுபோல் செய்தால், சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரி, குளம், குட்டைகளும் நிறையும். பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.   எனவே, தோணிமடுவு திட்டத்தையும், தானதியூர் மூலக்காடு நீரேற்று திட்டத்தையும், மேட்டூர் அணை காவிரி உபரிநீர் திட்டத்தையும் செயல்படுத்தக் கோரி, தேமுதிக சார்பில் மேட்டூர் எம்.எல்.ஏ. ஆர்.பார்த்திபன் தலைமையில் மேட்டூர்அணை முன்பு செவ்வாய்க்கிழமை கண்ன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

Comments
Loading...