Designed by Iniyas LTD
அரசியல் யாப்புக்கு மக்கள் கருத்து! இன்று கிளியில்
அரசியல் யாப்பு உருவாக்கத்திற்கான மக்கள் கருத்தறியும் செயற்றிட்டம் இன்று திங்கட்கிழமை கிளிநொச்சி, காலி மற்றும் கேகாலை மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் எழுத்து மூலமாகவும், மின்னஞ்சல், தொலைநகல் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் 1500 பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக செயற்றிட்டத்தின் தலைவர் சட்டத்தரணி லால் விஜயநாயக்க தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய பதிவு
இந்த செயற்றிட்டத்திற்கு இளைஞர்களின் பங்களிப்பு குறைவாகவே காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தமாத இறுதிக்குள் அமர்வுகளை நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கும் அதேவேளை, இளைஞர்களின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளும் வகையில் மேலதிக அமர்வுகளை நடத்துவதற்கும் எதிர்பார்ப்பதாக புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்திற்கான மக்கள் கருத்தறியும் செயற்றிட்டத்தின் தலைவர் சட்டத்தரணி லால் விஜயநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.