தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மேரி கொல்வின் அம்மையாரின் 2 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று!

mariecolvin-1தமிழ் மக்களின் துயரத்தை உலகத்தின் கண்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியவர் மேரி கொல்வின் அம்மையார்.உலகத் தமிழர்களின் உள்ளத்தில் அணையாத ஜோதியாய் விளங்கும் மேரி கொல்வின் அம்மையாரின் 2 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.தன் ஒரு விழியை இழந்தாலும் உலகத் தமிழர்களின்உள்ளத்தில்என்றும்  வாழ்ந்துகொண்டிருப்பவர்மேரிகொல்வின்அம்மையார்.

தமிழ்மக்களின் துயரில் அக்கறையுடன் செயற்பட்ட ஒரு உத்தமமான ஊடகவியலாளரை இழந்து இன்று இரண்டு வருடங்கள் ஆகின்றன.மேரிகொல்வின் அம்மாவின் இடதுகண்ணை பறித்தது சிங்கள அரசு. அவரது உயிரையே காவு கொண்டது சிரிய அரசு. எங்கெல்லாம் அரசபடைகளின் தாக்குதலில் அகப்பட்டு அப்பாவிகளின் அபயக் குரல் கேட்கிறதோ… அங்கெல்லாம் தனது இருப்பைப் பதிவு செய்த உத்தமமான ஊடகவியலாளரை இழந்து இன்று இரண்டு வருடங்கள் ஆகின்றன.

உலகத்தமிழர்கள் அணையாத ஜோதி மேரி கொல்வின் அம்மையாருக்கு தலைகள் சாய்த்து வீரவணக்கம் செலுத்துகிறோம். எமது தேசத்தின் ஆன்மாவில் உங்கள் பெயர் என்றென்றும் நிலைத்து இருக்கும்.

Comments
Loading...