Designed by Iniyas LTD
சிறிலங்காவுக்கு எதிரான தீர்மான வரைபு தயாரிப்பதில் மொறிசியசும் இணைவு !
சிறீலங்கா தொடர்பில் அமெரிக்காவினால் கொண்டு வரப்படவுள்ள தீர்மானவரைவில் அமெரிக்காவுடன் மொறிசியஸ் நாடும் இணைந்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னர் ஐக்கிய ராஜ்ஜியம், சியரலியோன்,மசிடோனியா மற்றும் மண்டினீக்ரோ ஆகிய நாடுகள்,அமெரிக்காவுடன் கூட்டாக குறித்த தீர்மானத்தினை வரைய பங்கெடுத்திருந்த நிலையில், எதிர்வரும் ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில் இதன்போது மொரிசியஸ் நாடும் இணைந்துள்ளது.
கூட்டாக வரையப்படும் இத்தீர்மானத்தின் முதல்நகல் வரும்வாரம்வரையப்பட்டவுடன்,அவ்வரைவில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் ஆகியன பல்வேறு நாடுகளுடன் உரையாடப்பட்டு அந்நாடுகளின் அனுசரணபெறப்படும்.எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2012ம் ஆண்டு 40 நாடுகளும் 2013ம் ஆண்டில் 41 நாடுகள் இணை அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.