தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மே.- 18 நினைவேந்தல் நிகழ்வுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

மே.- 18  பல்கலைக்கழக மாணவர்கள் நடாத்தும் நினைவேந்தல்   நிகழ்வுக்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்குங்கள் என காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள் தெரிவிக்கின்றனர்.

முல்லைத்தீவு மாவட்ட காணாலம் போனவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி மரியசுரோஸ் ஈஸ்வரி இன்று ஊடக சந்திப்பு  ஒன்றினை நடத்தி கருத்து தெரிவித்துள்ளார்.

420 ஆவது நாளாக 02.05.18 அன்று போராட்டத்தினை மேற்கொள்ளும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஆகிய எமக்கு  மே.- 18பல்கலைக்கழக மாணவர்கள் எங்கள் தமிழ் உறவுகள் அழிக்கப்பட்ட நினைவு நாளினை நினைவிற்கொள்ள முன்வந்துள்ளார்கள். இதற்கான அழைப்பினை விடுத்துள்ளார்கள்.

இந்த நிகழ்வினை நடத்தும் மாணவர்களுக்கு ஒத்துளைப்பினை வழங்கவேண்டும் என்பதனை ஊடகங்கள் ஊடாக அனைவருக்கும் தெரியப்படுத்தி நிக்கின்றோம்.

மே 18 அன்று அங்கங்கே ஒவ்வொரு விழக்கேற்றி மக்களை திசைதிருப்பி அலக்களிக்காமல் பல்கலை மாணவர்கள் குறிப்பிட்டதற்கு அமைவாக ஒரே இடத்தில் அரசியல் சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி தனிப்பட்டவர்களாக இருந்தாலும் சொந்தக்காரராக இருந்தாலும் சரி ஒரே இடத்தில் இந்த நினைவினை கொண்டாடுவதற்கு தமிழர்களின் ஒற்றுமையினை பலப்படுத்துவதற்கு அழிக்கப்பட்ட எம் தமிழ் உறவுகளுக்காக சுடர் ஏற்றவேண்டும் என்ற வேண்டுகோளினை முல்லைத்தீவு மாவட்ட காணாமல் போனவர்கள் சார்பாக வேண்டுகின்றோம்.

தமிழ் மக்கள் அழிக்கப்பட்ட ஒரோ இடத்தில் தமிழர்கள் ஒற்றுமையினை காட்டவேண்டும் மே 18 அன்று அழிக்கப்பட்ட மக்களாகத்தான் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றோம் அன்று எங்கள் உறவுகளை கையளித்த  நாளாக காணப்படுகின்றது. இவ்வாறு பாதிக்கப்பட்ட நாங்கள் விடுக்கும் வேண்டுகோளிற்கு ஒத்துளைப்பு கொடுக்கவேண்டும் பல்கலைக்கழக மாணவர்களுடன் எல்லோரும் ஒன்று சேர்ந்து தமிழ்மக்கள் ஒன்று திரண்டுதான் நிக்கின்றோம் என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டவேண்டும்.

இதில் அரசியல் சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி மனித உரிமை செயற்பாட்டாளர்களாக இருந்தாலும் சரி பொது அமைப்புக்களாக இருந்தாலும் அரசினை சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி பல்கலைக்கழக மாணவர்களுடன் மாவட்ட மக்கள் அனைவரும் ஒத்துளைப்பு கொடுத்து மே 18 எங்கள் துக்க நாளினை உலகத்திற்கு எடுத்துக்காட்ட அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று இந்த வேளையில் வேண்டுகின்றோம். என்று முல்லைத்தீவு மாவட்ட காணாலம் போனவர்கள் சங்கத்தின் தலைவி மரியசுரோஸ் ஈஸ்வரி தெரிவித்துள்ளார்.

Comments
Loading...