Designed by Iniyas LTD
வௌிநாடுகளில் பணி புரிகின்ற இலங்கையர்களிடம் சமுக வலைத்தளங்கள் ஊடாக மோசடி
சமுக வலைத்தளங்கள் ஊடாக வௌிநாடுகளில் பணி புரிகின்ற இலங்கையர்களிடம் குழு ஒன்று மோசடியில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதுபோன்ற மோசடிக்காரர்களிடம் ஏமாந்து போகவேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் அறிவுறுத்தியுள்ளது.
வெளிநாட்டு தொழிலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு என பல்வேறு பெயர்களில் இந்த கும்பல் இயங்குவதாக தெரிய வந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மோசடி
வௌிநாடுகளில் பணி புரிகின்ற இலங்கையர்களை சமுக வலைத்தள குழுக்களில் இணைத்துக் கொண்டு, பல்வெறு திட்டங்களுக்கு பணம் சேகரிப்பதாக கூறி மக்களை ஏமாற்றுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மோசடி சம்பந்தமான தகவல்கள் தெரிந்தால், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் சட்ட விசாரணைப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொது முகாமையாளரிடம் முறையிடுமாறு, இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
