தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மைத்திரி – கூட்டமைப்பு பேச்சுக்கள் தொடரும் – இரா. சம்மந்தன்

பாராளுமன்றம் கலைக்கப்பட்டாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் தாம் ஆரம்பித்துள்ள பேச்சுகள் தொடரும். அது அவரது தலைமையிலான அடுத்த ஆட்சியிலும் தொடரும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.samanthan

தேர்தலின் பின்னர் நிலையானதொரு தேசிய அரசாங்கம் அமையப் பெறும் எனும் நம்பிக்கை எமக்குள்ளது. அதில் தமிழ் மக்களது பிரச்சினைக்கு நிச்சயம் நிரந்தரத் தீர்வு கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார். நீண்டகாலமாக நிலவும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து அரசுக்கும் கூட்டமைப்புக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கியுள்ளதாக சம்பந்தன் தெரிவித்தார்.

இதன்போது அரசியல் பிரச்சினைக்கான தீர்வு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனோர் குறித்த தகவல்கள், மீள்குடியேற்றம் உட்பட பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக சம்பந்தன் தெரிவித்தார். பாராளுமன்றத் தேர்தலுக்கு பின்னரும் மைத்திரிபால சிறிசேனவே இலங்கையின் ஜனாதிபதியாக இருப்பார் என்பதால் அவருடன் இனப் பிரச்சினைக்கான தீர்வு உட்பட பல விஷயங்கள் பேசப்பட்டதாகவும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

Comments
Loading...