தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மைத்திரி மீது கோபம் கொண்டு நினைவு சின்னத்தை இடித்த பிக்கு!

625.500.560.350.160.300.053.800.900.160.90-2-8ஸ்ரீலங்கா ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன, மட்டக்களப்பு மாவட்டத்துக்கு விஜயம்செய்த நிலையில், பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொண்டிருந்தார்.

இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்த மட்டக்களப்பு மங்களராமய விஹாராதிபதி வண. அம்பிட்டியே சுமனரத்ன தேரர், தன்னுடைய விஹாரைக்கு விஜயம் செய்யுமாறு அழைப்புவிடுத்தார்.

எனினும், குறித்த விகாரைக்கு வருவதற்கு தனக்கு நேரமில்லை என்று ஜனாதிபதி தேரரிடம் தெரிவித்துவிட்டார்.

இதனால், ஜனாதிபதி மீது கடும் கோபம்கொண்ட தேரர், தன்னுடைய விஹாரையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயர் பொறிக்கப்பட்டிருந்த நினைவு கல்லை, சிலசால் அடித்து நொறுக்கியுள்ளார்.

Comments
Loading...