Designed by Iniyas LTD
மொரிசீயஸில் நிறுவப்பட உள்ள திருவள்ளுவர் சிலை! வந்தவாசியில் வரவேற்பு!
மொரீசியஸ் நாட்டின் மோக்கா நகரிலுள்ள மகாத்மா காந்தி கல்வி நிறுவனத்தில் நிறுவப்படவிருக்கிற திருவள்ளுவர் சிலைக்குவந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் வந்தவாசி நகரில் சிறப்பான முறையில் வரவேற்பு வழங்கப்பட்டது.
இவ்விழாவிற்கு புதுவை தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து தலைமையேற்றார். செயலாளர் ப.சீனிவாசன் அனைவரையும் வரவேற்றார். இராமலிங்கம் அன் கோ உரிமையாளர் இரா.சிவக்குமார், அரிமா சங்க மாவட்டத் தலைவர் இரா.சரவணன், நல்நூலகர் கு.இரா.பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தஞ்சை தமிழ்த் தாய் அறக்கட்டளையின் சார்பில் 2000 கிலோ எடையில், 4 அடி உயரத்தில் கன்னியாகுமரியில் கருங்கல்லால் வடிவமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை கடந்த ஜூலை 17-ஆம் தேதி கன்னியாகுமாரி கடற்கரையிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு, தமிழகத்தின் முக்கிய மாவட்டங்கள் வழியாக, தலைநகர் சென்னைக்கு வரவிருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசிக்கு வருகை தந்த திருவள்ளுவர் சிலைக்கு வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவர் அ.மு.உசேன் மலர்த்தூவி வரவேற்றார். வந்தவாசி பழைய பேருந்து நிலையம் காமராசர் சிலை அருகேயிருந்த திருவள்ளுவர் சிலைக்கு பொதுமக்கள் மற்றும் பள்ளி, மாணவர்கள் மலர்த்தூவி வரவேற்றனர்.
தஞ்சை தமிழ்த் தாய் அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் உடையார்கோயில் குணா, மேனாள் காஞ்சிபுரம் மாவட்டக் கல்வி அலுவலர் மா.மங்கையர்க்கரசி,துணைத் தலைவர் ப.கோ.நாராயணசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.