தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மோடியின் ஜப்பான் அரசுமுறைப் பயணம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜப்பானில் மேற்கொண்ட 5 நாள் அரசுமுறை சுற்றுப்பயணம் இந்திய வரலாற்றை திசைதிருப்பி முன்னேற்ற பாதையில் கொண்டு போகப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பயணத்தின் மூலமாக தெற்காசியாவில் புதிய சகாப்தம் உருவாகியிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் பாராட்டியுள்ளன.

modi_japan_tour_002

முதல் நாள்

முதல் நாளில், உத்தரபிரதேசத்தில் உள்ள வாரணாசி நகரை கியோட்டோ போன்று நவீன நகராக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இரண்டாவது நாள்

கியோட்டோ நகரில் உள்ள டோஜி புத்த கோவிலுக்கு சென்று வழிபட்ட மோடி, யோட்டோ பல்கலைக்கழகத்துக்கும் சென்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு சென்றுள்ளார்.

மூன்றாவது நாள்

டோக்கியோ நகரில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேயை சந்தித்த மோடி நடத்திய பேச்சுவார்த்தையில், உறவுகளை மேம்படுத்துவது, பரஸ்பர பொருளாதார, வர்த்தக நடவடிக்கைகளை அதிகரிப்பது, சர்வதேச பிரச்சினைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.

நான்காவது நாள்

இந்தியாவில் இன்னும் 5 ஆண்டுகளில் புல்லட் ரெயில் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதற்காக ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் கோடியை ஜப்பான் முதலீடு செய்கிறது. இதற்கான ஒப்பந்தங்கள் பிரதமர் நரேந்திர மோடி-ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே ஆகியோர் முன்னிலையில் கையெழுத்து ஆயின.

ஐந்தாவது நாள்

டோக்கியோவில் உள்ள பள்ளி ஒன்றில் புல்லாங்குழல் வாசித்து அசத்தியடதுன் டாடா கன்சல்டன்சி சர்வீசஸின் தொழில்நுட்பம் மற்றும் கலாச்சார அகாடமி துவக்க விழாவில் கலந்து கொண்டு அந்நாட்டின் பாரம்பரிய டிரம்மான டாய்கோவை வாசித்து ஜப்பானிய மக்களை பிரம்மிக்க வைத்துள்ளார்.

நாடு திரும்பிய மோடி

ஐந்து நாள் ஜப்பான் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து டெல்லி திரும்பி மோடியை விமான நிலையத்தில் வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.

Comments
Loading...