தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மோடியை விமர்சித்த ஐஐடி மாணவர் அமைப்புக்கு தடை : தமிழக கட்சிகள் கண்டனம்

iit-madrasசென்னை ஐஐடியில் செயல்பட்டு வரும் அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்ட அமைப்புக்கு தடை விதித்துள்ளதற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இத்தடை உத்தரவு மாணவர்களின் மத்தியில் பெரும் அதிருப்தியை அளித்துள்ளது. கருத்துச்சுதந்திரத்திற்கு ஏற்பட்ட தடையாகவே ஐஐடி மாணவர்கள் கருதுவதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அம்பேத்கர், பெரியார் வாசகர் வட்டத்தின் மூலமாக அங்கே பயில்கிற மாணவர்கள் சமூக சீர்திருத்த கருத்துகளையும் அவர்கள் எதிர்நோக்குகிற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகவும் விவாதித்தாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் பாரதிய ஜனதா ஆட்சியில் கல்வித்துறை காவி மயமாக்கப்படுவதை எதிர்த்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள இளங்கோவன் இதற்கு எதிராக போராட முன் வந்துள்ள மாணவர்களுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்கும் என்றும் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மத்தியில் பாரதிய ஜனதா அரசு அமைந்த கடந்த ஓராண்டு காலமாக கருத்துரிமையின் மீதும், மாற்றுக் கருத்து கூறுவோர் மீதும் தாக்குதலை சங் பரிவார் அமைப்புகள் நடத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தொலைக்காட்சி நிறுவனங்களை தாக்குவதும் விமர்சிப்போரை மிரட்டுவது போன்ற நடவடிக்கையின் தொடர்ச்சியாகவே அம்பேத்கர், பெரியார் வாசகர் வட்டத்திற்கு தடை விதித்துள்ளதாக ஜி.ராமகிருஷ்ணன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Comments
Loading...