Designed by Iniyas LTD
மோடி விஜயம் செய்வதற்கு முன் சுஸ்மா சுவராஜ் சிறிலங்கா செல்கின்றார்
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கை விஜயம் செய்ய உள்ளார். எதிர்வரும் 13ம் திகதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். இந்த விஜயத்திற்கான முன் ஆயத்தங்களை மேற்கொள்ளும் நோக்கில் சுஷ்மா சுவராஜ் இந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
இலங்கையில் இரண்டு நாட்கள் தங்கியிருக்கும் சுவராஜ், பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.1987ம் ஆண்டின் பின்னர் முதல் தடவையாக இந்திய பிரதமர் ஒருவர் உத்தியோகபூர்வ இரு தரப்பு விஜயமொன்றை இலங்கைக்கு இம்முறை மேற்கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நரேந்திர மோடி யாழ்ப்பாணம், அனுராதபுரம் மற்றும் கண்டி ஆகிய பகுதிகளுக்கு விஜயம் செய்ய உள்ளார்.கண்டி தலதா மாளிகைக்கும் விஜயம் செய்ய உள்ளதாகவும், பெருந்தோட்ட வீடமைப்பு திட்டத்தை மோடி பார்வையிட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது