Designed by Iniyas LTD
யாழிலிருந்து இராணுவம் வெளியேற 100 கோடி வேண்டும் – கட்டளை தளபதி..
யாழில் .மாவட்டத்தில் இராணுவத்தின்வசம் உள்ள காணிகளை விடுவிக்க வேண்டுமெனில் 100 கோடி ரூபாய் தரவேண்டுமென அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதனை யாழ்.மாவட்ட இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி இன்று ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் பொது மக்களின் காணிகளில் அமைந்துள்ள படை முகாம்கள் மற்றும் பயன்பாட்டில் உள்ள காணிகளை விடுவிப்பதற்கு தமக்கு மாற்றுக்காணிகள் வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அதற்கு ஒரு பில்லியன் நிதியும் தேவையாக இருப்பதாகவும் , குறித்த நிதி விபரத்தை அரசின் கவனத்திற்கு சமர்ப்பித்துள்ளதாகவும் தர்ஷன கெட்டியாராட்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..