Designed by Iniyas LTD
யாழில் ஊடகவியலாளர் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல்..
யாழ்ப்பாணம், கொழும்புத்துறை பகுதியில் இனந்தெரியாத குழுவொன்றினால் நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் ஊடகவியலாளர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
யாழில் இருந்து வெளிவரும் பத்திரிக்கை ஒன்றின் பிராந்திய ஊடகவியலாளரும் விநியோக முகாமையாளருமான செல்வராசா இராசேந்திரம் என்பவர் மீதே வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது
படுகாயமடைந்த அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவத்துக்கான காரணம் இன்னும் வெளிவராத நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.