Designed by Iniyas LTD
யாழில் தந்தையின் தாக்குதலுக்கு உள்ளான 5 வயது சிறுவன் வைத்தியசாலையில் அனுமதி…
யாழ் இணுவிலில் தந்தையின் தாக்குதலுக்கு உள்ளான 5 வயது மகன் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
போதை தலைக் கேறிய நிலையில் தந்தை சிறுவனைக் கடித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
சிறுவனின் கை, முதுகு , முகம் எனப் பல இடங்களிலும் கடி காயங்களுக்கு இலக்காகியுள்ளான்.
சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதை அடுத்து . சிறுவனின் தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசரணைகளி்ன் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
