Designed by Iniyas LTD
யாழில் தொடராக இடம்பெற்ற வாள்வெட்டினால் மக்கள் பீதி…
யாழில் பல்வேறு இடங்களில் வாள்வெட்டு குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தில், கொக்குவில், இணுவில் மற்றும் தாவடி ஆகிய இடங்களில் இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவங்கள் நேற்று மாலை 3.45 மணி தொடக்கம் 4.30 மணிக்குள் 45 நிமிடங்களுக்குள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.