Designed by Iniyas LTD
யாழில் பல இடங்களில் வாள்வெட்டுக் குழு அட்டகாசம்….
யாழ்.நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு மூன்று மோட்டார் சைக்கிளில் சென்ற வாள்வெட்டு குழுவினர் வாகனங்கள் , கடைகளை அடித்து உடைத்துள்ளனர்.
நாச்சிமார் கோவிலடி, ஓட்டுமடம் மற்றும் தம்பி லேன் ஆகிய இடங்களில் இரவு 8.45 மணி முதல் 9.30 க்கு இடைப்பட்ட இடைவெளிகளில் இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.
நாச்சிமார் கோவிலடியில் வீதியால் சென்ற பட்டா ரக வாகனத்தை இடைமறித்த குறித்த கும்பல் வாகன சாரதியை தாக்கியதுடன் , வாகனத்தையும் அடித்து நொருக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் அவர்கள் அங்கிருந்த கடையொன்றினை அடித்து நொருக்கியதுடன் கடையில் நின்றவர்களையும் அச்சுறுத்தி சென்றுள்ளனர்.
பின்னர் ஓட்டுமடம் பகுதியில் சிறிது நேரம் நின்று வீதியால் சென்றவர்களை அச்சுறுத்தி விட்டு அச்சுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
சம்பவங்கள் தொடர்பில் யாழ் பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து சம்பவ இடங்களுக்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
எனினும் குறித்த சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிகப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.