தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழில் பிரதமர் சென்ற ஹோட்டல் முன் கல்வீச்சு நடத்தப்பட்டுள்ளது

யாழ்ப்பாணம்  யூஎஸ் ஹோட்டலில் இரவு விருந்துக்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவருடன் இணைந்த குழுவினர் சென்றிருந்த வேளை  ஹோட்டலின் வெளிப்புறத்தில் கல் வீச்சு  நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.,

“யாழ்ப்பாணம் சென்றுள்ள  ரணில் விக்கிரமசிங்க இரவு  யூஎஸ் ஹோட்டலில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த இரவு விருந்துக்கு சென்றிருந்தார்.

அவருக்கு பாதுகாப்பிற்காக பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர் பாதுகாப்புக் கடமைக்கு அதிகளவில் அமர்த்தப்பட்டிருந்தனர்.

இந் நிலையில் இரவு 9.45 மணியளவில் யாழ்ப்பாண நகரத்தில் மின் தடை ஏற்பட்டது.

அவேளை யூஎஸ் ஹோட்டலுக்கு வெளிப்புறத்தில் யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் , கல்வீசியவர்கள் தப்பி ஓடிவிட்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த  சம்பவம் தொடர்பில் துரித விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் ” பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை  ஹோட்டல் மீது எந்த கல்வீச்சுத் தாக்குதலும் இடம்பெறவில்லை என ஹோட்டல்  நிர்வாகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...