Designed by Iniyas LTD
யாழில் மீனவரின் படகு எரிப்பு – விக்ஷமிகள் செயல்..
யாழ், நாவந்துறை மீனவர் ஒருவருக்குச் சொந்தமான மீன்பிடிப்படகு இனந்தெரியாதோரால் எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளது.
சுமார் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான படகு கேரதீவு இறங்குதுறையில் தரித்து நின்றபோதே சனிக்கிழமை இரவு இனந்தெரியாத நபர்களினால் எரியூட்டப்பட்டுள்ளது.
குறித்தபடகினை நம்பி தமது வாழ்வாதாரத்தை ஓட்டி வந்த நிலையில், தமது தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த மீனவர் கலவைவெளியிட்டுள்ளார்.
இதேவேளை கடந்த 3 வருடங்களுக்கு முன்பும் கேரதீவு இறங்குதுறையில் வைத்து 3 படகுகளின் வெளியிணைப்பு இயந்திரங்கள் களவாடப்பட்டதாகவும்,
மீனவர்களின் படகுகள் தொடர்ச்சியாக சேதமாக்கப்பட்டு வருவதாகவும் அப்பகுதி மீனவர்கள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் இப்படியான சம்பவங்களுக்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட மீனவரிற்குரிய இழப்பீட்டினை வழங்க வேண்டும் எனவும் நவாந்துறை மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.