Designed by Iniyas LTD
யாழில் ரணிலின் பதவியேற்பை பட்டாசு கொளுத்தி கொண்டாட்டம்..
ரணில் விக்கிரமசிங்க மீண்டும் இலங்கையின் பிரதமராக பதவியேற்றுள்ளார்.
கடந்த கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி ஜனாதிபதியினால் பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் மீளவும் பிரதமராக பதவியேற்றுள்ளார்.
இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள ரணிலின் ஆதரவாளர்கள் பட்டாசுகள் கொளுத்தி ஆரவாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ் நகர பேருந்து நிலையத்துக்கு அண்மையில் அவர்கள் பட்டாசுகள் கொளுத்தி ஆரவாரத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.



