தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற சொகுசு பஸ் மீது விஷமிகள் கல் வீச்சு…

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்று  கொண்டிருந்த தனியார் பயணிகள் சொகுசு பஸ் மீது விஷமிகள் கல் வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றிரவு 10.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

யாழ். செம்மணி வீதியில் வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொழில் போட்டி காரணமாக இந்தச் சம்பவத்தைச் செய்திருக்கலாம் என பஸ் உரிமையாளர் கூறியுள்ளார்.

இந்தச் சம்பவத்தால் பஸ் வீதியில் நீண்ட நேரம் பயணிக்காமல் நின்றதால் பயணிகள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

Comments
Loading...