Designed by Iniyas LTD
யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் கடத்தல் விற்பனையை முற்றாக ஒழிக்க பொலிஸார் நடவடிக்கை
யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் கடத்தல் விற்பனையை முற்றாக ஒழிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவிகப்படுகின்றது.
இதற்காக வட மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் றொஷான் பெர்னாட்டோவால் சிறப்பு பொலிஸ் செயலணி அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
சுவரொட்டிகள்
இந்தச் செயலணியின் பணிகள் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், செயலணி தொடர்பான விழிப்புணர்வு சுவரொட்டிகள் குடாநாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்கள் ஊடாகவும் ஒட்டப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது..
இதேவேளை யாழ்ப்பாணத்தில் பொருள்களின் விற்பனை தற்போது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது..
