Designed by Iniyas LTD
யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் ஒருவர் கைது..
யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 6 கிராமும் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி கனகாம்பிகைகுளம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞரை சிறப்பு அதிரடிப் படையினர் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்,
இதனை அடுத்து பொலிஸார் அவரை யாழ்.நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தியபோது சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கபட்டுள்ளது.