தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழ்ப்பாணம் பள்ளிவாசலுக்கு அண்மையில் நிலக் கீழ் பதுங்கு குழி..

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி வீதியில் பச்சைப் பள்ளிவாசலுக்கு அண்மையில் உள்ள வர்த்தகரின் வீடொன்றுக்குள் நிலக்கீழ் தளம் (Underground) ஒன்று சிறப்பு அதிரடிப் படையினரால் கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நாவாந்துறைப் பகுதியில் இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து பெரியளவிலான சுற்றிவளைப்புத் தேடுதலை முன்னெடுத்திருந்தனர்.

இந்தத் தேடுதலின் போதே வீடொன்றுக்குள் அமைக்கப்படிருந்த நிலக்கீழ் தளம் கண்டறியப்பட்டது.

அடுக்குமாடிகளைக் கொண்ட வீடொன்றின் கீழ் குறித்த பதுங்கு குழி கண்டு பிடிக்கப்பட்டுள்ளதால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பங்கர் வடிவிலான இந்த நிலக்கீழ் தளம் சீமெந்தால் கட்டப்பட்டுள்ளது. அதனைக் கண்டறியாதவாறும் சீமெந்திலான கொங்கிரீட் போடப்பட்டுள்ளது

இந்நிலையில் குறித்த வீட்டின் உரிமையாளர் தற்போது இறந்துவிட்ட நிலையில் , தமிழ் – முஸ்லிம் குடும்பங்களால் இணைந்து அந்த வீடு பராமரிக்கப்படுகிறதாக விவரம் அறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

Comments
Loading...