தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழ்  கோட்டைக்குள் இராணுவம் புதிதாக வர வேண்டிய எந்த தேவையும் இல்லை – எம்.கே. சிவாஜிலிங்கம்.

யாழ்  கோட்டைக்குள் இராணுவம் புதிதாக வர வேண்டிய எந்த தேவையும் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர்,

எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளதாக குறித்த நாளிதழில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ் கோட்டைக்குள் மாத்திரமல்ல, வடக்கில் எந்த இடத்திலும் தற்போது புதிதாக இராணுவத்தினரை நிலை நிறுத்த வேண்டிய தேவையில்லை எனவும்,

யாழ்ப்பாண கோட்டை தொல்லியல் மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க இடம் என்பதால், அங்கு இராணுவத்தினரை நிலை நிறுத்தும் எந்த தேவையும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ் சென்ற பிரதமர், நாட்டில் மீண்டும் யுத்தம் ஒன்று ஏற்படாது என கூறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் உட்பட அரசாங்கம் மீண்டும் யுத்தம் ஏற்படாது என்ற நம்பிக்கையில் இருக்கும் போது, வடக்கில் உள்ள இராணுவத்தினரை அப்புறப்படுத்தி விட்டு, பொது பாதுகாப்புக்காக பொலிஸார் ஈடுபடுத்த வேண்டிய நிலையில்,

யாழ்ப்பாண கோட்டைக்குள் இராணுவ முகாமை வைத்திருப்பது தேவையாற்ற நடவடிக்கை எனவும் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

Comments
Loading...