தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழ் சட்டத்தரணிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ள யாழ் சமூக ஆர்வலர்கள்…

  யாழ்ப்பாண சட்டத்தரணிகளிற்கு யாழ்  சமூகஆர்வலர்கள்  வேண்டுகோள்  ஒன்றை    விடுத்துள்ளனர்.
வலிகாமம் வடக்கில் கடந்த 19ம் திகதி  வீடு ஒன்றில்  புகுந்து கொள்ளையடித்ததோடு , வீட்டிலிருந்த சிறுமியை சீரழித்த சம்பவத்தின் சூத்திரதாரிகள் என்ற சந்தேகத்தில்  இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
 இந்த சம்பவத்தின் பின்னனியில் தெல்லிப்பழையை சேர்ந்த மகாதேவன் ரூபன் (28), ஏழாலையை சேர்ந்த இராஜகோபால் கிருஸ்ணகுமார் (30) ஆகியோரே, இதன்  பிரதான சூத்திரதாரிகள் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அவர்களை விட, குறித்த சம்பவம் தொடர்பில் மேலும்    இருவர் கைதாகியுள்ளனர்.
இரண்டு வீடுகளிற்குள் புகுந்து திருடர்கள் நகை, பணம் என்பவற்றை கொள்ளையடித்தனர். ஒரு வீட்டில், சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர்.
இதனை அடுத்து குறித்த சிறுமி  யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டார்.
மேலும்   சம்பவம் தொடர்பில் இளவாலையை சேர்ந்த இளைஞன் ஒருவனை பொலிசார் கடந்த வியாழக்கிழமை சந்தேகத்தின் பெயரில் கைது செய்தனர்.
குறித்த நபர் வீடுகளை நோட்டமிட்டு, கொள்ளைக்கும்பலிற்கு தகவல் வழங்குவதை சிசிரிவி கமரா காட்சிகளின் அடிப்படையில் கண்டறிந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
அவனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையையடுத்து கட்டுவனை சேர்ந்த மகாதேவன் ரூபன் என்பவனை பொலிசார் கைது செய்து  மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்,
இராஜகோபால் கிருஷ்ணகுமார் என்பவனை, அவனது வீட்டில் வைத்து பொலிசார் கைது செய்தனர்.  இந்நிலையில் குறித்த வீடுகளில் நகை, மற்றும்  பணத்தை கொள்ளையிட்டதை இருவரும் ஏற்றுக்கொண்டனர்.
அவற்றை நவாலியிலுள்ள பெண் ஒருவரிடம் கொடுத்ததாக வாக்குமூலமளித்ததை  தொடர்ந்து   குறித்த பெண்ணும்  கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றார்.
இதேவேளை  சிறுமியை பலாத்காரம் செய்த விடயத்தில், இருவரும் ஒருவர் மீது மற்றவர் குற்றம்சாட்டி வருகி ந்ற நிலையில், சிறுமியின் வாக்குமூலப்படி, இருவரும் அந்த பாதகச்செயலில் சம்பந்தப்பட்டாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை மல்லாகம் மாவட்ட பதில் நீதிவான் முன்னிலையில் இருவரையும் முற்படுத்தியபோது, நாளை வரை அவர்களை விளக்கமறியலில் வைத்து விசாரிக்க  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதே வேளை குறித்த கொள்ளையர்கள் சார்பாக சட்டத்தரணிகள் ஆயராகுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என யாழ்  சமூகஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும்  கஞ்சா முதல் கொலையாளிகள் வரை காசு வாங்கி விடுவிக்கும் தொழிலை செய்து விட்டு பின்னர் சமூக நீதி பேசுகின்ற பெண் சட்டத்தரணிகளாவது குறித்த சந்தேகநபர்கள்  சார்பில் ஆஜராகாது புறக்கணிக்க வேண்டுமென அவர்கள்  வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Loading...