Designed by Iniyas LTD
குடாநாட்டின் ஆலயங்கள், தேவாலயங்கள் என்பன தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 60 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், யாழ்ப்பாணத்தில் இராணுவ ரோந்து நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன. அத்துடன் குடாநாட்டின் ஆலயங்கள், தேவாலயங்கள் என்பனவும் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
யாழ். நகரப்பகுதியில் இன்று காலை விடுதலைப் புலிகளின் தலைவரின் புகைப்படத்துடன் வெளியான உதயன் பத்திரிகையை வாசித்துக் கொண்டிருந்த மூவர் இராணுவத்தினரால் கடுமையாக எச்சரிக்கப்பட்ட பின் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இதேபோன்று வெதுப்பகத்தில் உணவுப் பொருட்கள் வாங்கச் செல்பவர்களையும் இராணுவத்தினர் அவர்கள் என்ன வாங்கிச் செல்கின்றனர் எனவும் சோதனையிட்டுள்ளனர்.
வீதிகள் மற்றும் பொது இடங்களில் வைக்கப்பட்ட கார்த்திகைப் பூக்களால் கடற்படையினர் பாதுகாப்புக் கெடுபிடி
நெடுந்தீவில், நேற்று வீதிகள் மற்றும் பொது இடங்களில் வைக்கப்பட்ட கார்த்திகைப் பூக்களால் கடற்படையினர் பாதுகாப்புக் கெடுபிடிகளை அதிகரித்தனர். அத்துடன் கடற்படையினரின் ரோந்து நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. மாவீரர் வாரம் ஆரம்பமாகிய நிலையில் விடுதலைப் புலிகளால் தேசிய மலராகப் பிரகடனப்படுத்தப்பட்ட கார்த்திகைப் பூக்கள் நேற்று மதியம் நெடுந்தீவின் முதலாம்,இரண்டாம் வட்டாரப் பகுதிகளின் வீதிகள், பொது இடங்களில் பரவலாக வைக்கப்பட்டன. இவை போத்தல்களில் வைக்கப்பட்டிருந்தன.
இதையடுத்து அங்கு வந்த கடற்படையினர் அவற்றை எடுத்துச் சென்றனர். அத்துடன் அப்பகுதிகளில் பாதுகாப்புக் கெடுபிடிகளையும் அதிகரித்துள்ளனர். ரோந்து நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டன