தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழ்.தாவடியில் வெடிபொருட்கள் மற்றும் வயா்கள் மீட்பு!

யாழ்.தாவடி பத்திரகாளி கோவில் வளாகத்திலிருந்து வெடிபொருட்கள், வயா்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டிருந்த தேடுதல் நடவடிக்கையின்போதே குறித்த பகுதியில் மேற்படி பொருட்கள் மீட்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதன்போது 9 மில்லி மீற்றர் துப்பாக்கி ரவை கூடு மற்றும் 5 தோட்டாக்கள், வயர்கள் ஆகியன மீட்கப்பட்டுள்ளதாகவும், குறித்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...