தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்ட பொதுமக்களுக்கு புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் அஞ்சலி..

கடந்த 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு அன்று கொழும்பு மற்றும் மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் அநியாயமாகக் கொல்லப்பட்ட அப்பாவி பொது மக்களின் ஆத்மா சாந்தியடையவும்  அன்றைய குண்டுத் தாக்குதலில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும்  அவர்களுடைய குடும்பங்களின்  ஆறுதலுக்காக இறை ஆசி வேண்டியும் நேற்றைய தினம் புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் அஞ்சலி நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின்  மாநாட்டு மண்டபத்தில் இந்த அஞ்சலி நிகழ்வு புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் செல்லையா பிரேமகாந்த் அவர்களுடைய தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது பிரதேச சபை  உறுப்பினர்கள் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் அனைவரும் மெழுகுதிரி ஏற்றி   மலர்தூவி அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினர் அதனை தொடர்ந்து புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் செல்லையா பிரேமகாந்த் அஞ்சலி உரை நிகழ்த்தினார்.

கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற இந்த தாக்குதலில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும் பல நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...