தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழ் நல்லூரில் தியாக தீபம் திலீபனின் 31ஆம் ஆண்டு நினைவேந்தல் நாள் அனுஸ்டிப்பு..

யாழ் நல்லூரில் தியாக தீபம் திலீபனின் 31ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து தியாகி திலீபன்  கடந்த 1987 செப்டெம்பர் 15ஆம் திகதி தனது உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.

அவருடைய உண்ணாவிரதம் 12 நாட்கள் கடந்திருந்த நிலையில் செப்டெம்பர் 26ஆம்  லெப்டினன் கேணலாக, யாழ்.மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த தியாகி திலிபன் தன் மண்ணின் விடியலுக்காய்  வீரசாவடைந்தமையும் நினைவில்கொள்ளத்தக்கது.

இந்த நிலையில் தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று காலை  யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ளச் அவருடைய  நினைவிடத்தில்  அனுஸ்டிக்கபப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...