Designed by Iniyas LTD
யாழ் பண்ணைப் பகுதியில் விபத்து! பெண் பலி ஐவர் படுகாயம்
யாழ் பண்ணைப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 5 பேர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது, நேற்று திங்கட்கிழமை மதியம் யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த வான் ஒன்று பண்ணைப் பாலப் பகுதியில் உள்ள சுற்றுவட்டத்திற்கு அருகில்
இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தொடர்புடைய பதிவு
.jpg)
சாரதி நித்திரையானதன் காரணத்தால், அருகில் உள்ள மின்சார கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் அளவெட்டி பகுதியைச் சேர்ந்த சிறிதரன் சிவமலர் (வயது 49) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த மற்றைய ஐவரும் உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.