Designed by Iniyas LTD
யாழ் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் சிங்கள இனத்தைச் சேர்ந்த ஒருவர் போராட்டம்….
யாழ் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் சிங்கள இனத்தைச் சேர்ந்த ஒருவர் இன்று காலை 9 மணி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கில் சமாதானம் சீர்குலைந்திருப்பதால் சமாதானத்தை கட்டியெழுப்ப வேண்டுமென வலியுறுத்தி அவர் இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

வடக்கில் சமாதானத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்றும் ,அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாமல் இருப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர் தெரிவித்துள்ளார்.
கிழக்கில் சமாதான மாதா மரண பங்கத்தில் இருக்கும் நிலையில் வடக்கிலும் சமாதானம் சீர்குலைவது ஆபத்து என்பதால் சமாதானத்தை பாதுகாத்து உலக சமாதானம் உருவாக வேண்டுமென்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.