Designed by Iniyas LTD
யாழ்.சுன்னாகத்தில் குற்றங்களுடன் தொடர்புடைய இருவர் கைது….
யாழ்.சுன்னாகத்தில் குற்றங்களுடன் தொடர்புடைய இருவர் இன்றைய தினம்(27) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிகபட்டுள்ளது.
கைதான நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கொக்குவில் பகுதியிலுள்ள ஆலயமொன்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாள்கள் மற்றும் கைக்கோடரிகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதோடு கைதான சந்தேகநபரொருவரிடமிருந்து ஒரு தொகை ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த சந்தேகநபர்களிடம் சுன்னாகம் பொலிஸார் தொடர் விசாரணைகள் முன்னெடுத்து வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
