Designed by Iniyas LTD
வெல்லம்பிட்டிய செப்புத் தொழிற்சாலை ஊழியர்கள் 8 பேர் குறித்த விசாரணைகள் பொலிஸ் பயங்கரவாத தடுப்புப் பிரிவிடம் …
வெல்லம்பிட்டிய செப்புத் தொழிற்சாலை ஊழியர்கள் 8 பேர் குறித்த விசாரணைகள் பொலிஸ் பயங்கரவாத தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக பல குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள குறித்த சந்தேகநபர்களை நாளை (திங்கட்கிழமை) மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 8 சந்தேகநபர்கள் அடங்கலாக 9 பேரை பிணையில் விடுவிப்பதற்கு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் கடந்த 6ஆம் திகதி உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதேவேளை பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதால் சந்தேகநபர் ஒருவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலுக்கான குண்டுகள் தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வெல்லம்பிட்டிய செப்புத்தொழிற்சாலை படையினரின் சுற்றிவளைப்பில் முற்றுகையிடப்பட்டு,
குறித்த தொழிற்சாலையின் ஊழியர்களும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது