Designed by Iniyas LTD
யாழ். மேதினக் கூட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி ..
இலங்கை ஆசிரியர் சங்கம்,யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம்,புதிய அதிபர் சங்கம்,வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம்,சமூக விஞ்ஞான ஆய்வு மையம் ஆகியன இணைந்து நடாத்திய மேதினக் கூட்டம் இன்று யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்க பொது மண்டபத்தில் இடம்பெற்றது

இதன்போது கடந்த-21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு திருநாளன்று இலங்கையின் நடாத்தப்பட்ட பயங்கரவாதத் தற்கொலைத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களுக்கு மெழுகுதிரி ஏற்றி அஞ்சலி செலுத்துதலுடன் மேதினக் கூட்டம் ஆரம்பமானது.

அதனைத் தொடர்ந்து தொழிற்சங்கத் தலைவர்களது உரைகள் இடம்பெற்றதுடன் 2019 மே தினச் செய்திகளும் வழங்கப்பட்டன.
மேலும் ,கூட்ட நிறைவில் கலந்துரையாடல் இடம்பெற்றுக் கருத்துக்களும் பரிமாறப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.