தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழ், வடமராட்சியில் மீனவரின் உடமைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது

யாழ், வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு-முள்ளியான் கடற்கரையில் தரித்துவிடப்பட்ட,  படகு மற்றும் வெளியிணைப்பு இயந்திரம் என்பன எரித்து நாசமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த  படகு மற்றும் வெளியிணைப்பு இயந்திரம் என்பன நான்கு இலட்சம் ரூபாய் பெறுமதியானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முள்ளியானைச் சேர்ந்த செபமாலை சுஜீபன் என்பவரது படகே நல்லிரவு விசமிகளால் தீயிட்டு நாசம் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த படகின் உரிமையாளர்  கடந்த மாதம் 20ம் திகதி வட்டைக்காட்டு கடற்பரப்பில்  சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த வெளி மாவட்ட மீனவர்களைப் பிடித்து ,நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தவர் எனவும் கூறப்படுகின்றது ,

இதன் காரணமாகவே   அவருடைய உடமைகள்  தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

Comments
Loading...