தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யுத்தத்தின் பின்னர் வடமாகாணத்தில் 131 விகாரைகள்…

போருக்கு பின்னரான இந்த  9 வருடங்களில் வடமாகாணத்தில்  131 விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளது.

இதனை  வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் கூறியுள்ளார்.

இந்த விகாரைகளில்  முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் 67 விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம்  அம்பலமாவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும்  வடமாகாணத்தில், குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் திட்டமிட்டவகையில் தமிழ் மக்களின் நிலங்களில் சிங்கள மக்கள் குடியேற்றப்படுகின்றதாகவும்,

மறுபக்கம் பௌத்தர்கள் வாழாத பகுதிகளில் திட்டமிட்டு பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதோடு  யாழ்ப்பாண மாவட்டத்தில் 6 விகாரைகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் 3 விகாரைகளும், மன்னார் மாவட்டத்தில் 20 விகாரைகளும், வவுனியா மாவட்டத்தில் 35 விகாரைகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 67 விகாரைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து தமிழ் தலைவர்கள் கண்டு கொள்ளாமல் இருகின்றதாகவும்,

இனிமேலாவது வடமாகாணத்தில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட குடியேற்றங்களை நிறுத்துவதுடன் பௌத்தமயமாக்கலையும் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டியது கட்டாயம் ” என அவர்  மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Comments
Loading...