தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ரக்ஷ்யாவிற்கு விஜயம் செய்ய உள்ளார் வடகொரிய அதிபர்.

ரஷ்ய அதிபர் புதினின் அழைப்பை ஏற்று வருகிற செப்டம்பர் மாதம்  வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்  அங்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

கடந்த 12-ஆம் தேதி அன்று சிங்கப்பூரின் சென்டோசா தீவில், அமெரிக்கா அதிபரை சந்தித்து கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

இந்நிலையில் இந்த பேச்சுவார்த்தை குறித்து ரஷ்ய அதிபர் புதினிடம் வட கொரியா நாடாளுமன்ற குழுத் தலைவர் கிம் யோங் நாம், மாஸ்கோ நகருக்கு சென்று பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கூறியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
.அதன்போது ரஷ்யாவுக்கு வருமாறு கிம் ஜோங் உன்னுக்கு , புதின் அழைப்பு  விடுத்ததாகவும் , அதனை  ஏற்று செப்டம்பர் மாதம் ரஷ்யாவுக்கு  வடகொரிய அதிபர் செல்லவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது  
Comments
Loading...