தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ரணிலுக்கும் – சீவி. விக்கிக்கும் கருத்து முரன்பாடு இல்லை – செல்வம் அடைக்கலநாதன்

வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­னேஸ்­வ­ர­னுக்கும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கும் இடையில் கருத்து முரண்­பா­டுகள் இல்லை. ஒரு சில தர்க்­கங்­களை பிரி­வி­னை­யாக கரு­தக்­கூ­டாது என தமிழ் தேசி­யக்­ கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் செல்வம் அடைக்­க­ல­நாதன் தெரி­வித்துள்ளார்.
வட­மா­கா­ணத்­திற்­காக விஜ­யத்­தினை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேற்­கொண்­டுள்ள நிலையில் கூட்­ட­மைப்பு உட­னான சந்­திப்பு தொடர்­பிலும் வட­மா­காண முத­ல­மைச்சர் மற்றும் பிர­த­ம­ருக்கு இடையில் ஏற்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­படும் கருத்து முரண்­பா­டுகள் தொடர்பில் வின­வி­ய­ போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பிட்­ட­தா­வது,

பிர­த­மரின் யாழ். விஜயம் மிக ஆரோக்­கி­ய­மா­ன­தென்றே நாம் கரு­து­கின்றோம்.

கடந்த வாரம் வடக்கில் காணி விடு­விப்பு நிகழ்வில் பிர­தமர் கலந்து கொண்­டி­ருந்த போதும் அவ­ரு­ட­னான சந்­திப்­பினை மேற்கொள்ள முடி­ய­வில்லை. எனினும் நாளை ஞாயிற்றுக்கிழமை நாம் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை கிளி­நொச்­சியில் சந்­திக்­க­வுள்ளோம்.selvam new_CI

இச்­சந்­திப்பின் போது மன்னார், வன்னி பகு­தி­களில் இரா­ணுவ வச­மி­ருக்கும் பொது­மக்­களின் காணி­களை விடு­விப்­பது தொடர்­பிலும் அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்­பிலும் எம்பக்க கருத்­துக்­களை முன்­வைப்போம்.

வடக்கில் காணிகள் விடு­விக்­கப்­பட்ட போதிலும் மக்­களின் நிலங்கள் முழு­மை­யாக விடு­விக்­கப்­ப­ட­வில்லை. வன்னி, மன்னார் முள்­ளிக்­குளம், பகு­தி­களில் மக்­களின் நிலங்கள் இன்றும் இரா­ணு­வத்­தினர் பிடி­யி­லேயே உள்­ளது.

எனவே இவ்­வி­ட­யங்­களை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் கவ­னத்­திற்கு கொண்டுவர­வுள்ளோம்.

அதே­போல வட­மா­காண முத­ல­மைச்சர் மக்­களின் உண்மை நிலை­மை­யினை வெளிப்­ப­டுத்­தி­யுள்ளார். அவரின் கருத்­துக்­களில் நியா­ய­மான கோரிக்­கை­களே உள்­ள­டங்­கி­யி­ருக்­கின்­றது. அதேபோல் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கும் வட­மா­காண சபைக்கும் எவ்­வித முரண்­பா­டு­களும் இல்லை. ஒரு சில கருத்து முரண்பாடுகளை பிரிவினைக்கான சண்டையென சித்தரிப்பது தவறானது.

வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் கருத்துக்களினால் அரசாங்கத்துடன் முரண்பாடுகள் ஏற்படப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

Comments
Loading...