Designed by Iniyas LTD
ரவிகரனை சந்தித்த அமெரிக்க தூதரக அரசியல் அதிகாரி
புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அமெரிக்க தூதரக அரசியல் அதிகாரி தமேசா ஹென்றி அவர்களுக்கும் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. 
முல்லைத்தீவில் ரவிகரன் இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் அமெரிக்க தூதரக அதிகாரி சந்திப் குரோஸ் அவர்களும் கலந்து கொண்டிருந்தார். உயிரிழந்தோரை நினைவு கூரும் உரிமை உள்ளடங்கலாக தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சமகால அரசியல் சிக்கல்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது.