தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ராகுலின் எதிர்ப்பால் தான் சோனியா பிரதமராகவில்லை

சோனியா பிரதமர் ஆவதற்கு ராகுல் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் சோனியா பிரதமராக முடியவில்லை என முன்னாள் அமைச்சர் நட்வர்சிங் தெரிவித்துள்ளார்.  ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்த நட்வர்சிங் எழுதி விரைவில் வெளி வர உள்ள சுயசரிதையான ஒரு வாழ்க்கை போதுமானதல்ல என்ற புத்தகத்தில் மேற்கண்ட தகவல் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார். BANGLADESH-INDIA-DIPLOMACY-HEALTH-CONFERENCE

மேலும் அவர் கூறியதாவது: கடந்த 2004-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவியேற்ற போது பிரதமர் பதவிக்கு சோனியா பெயர் அடிபட்டது. இருப்பினும் அவர் பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட வில்லை. தனது தந்தை ராஜிவ், பாட்டி இந்திராவை போன்று தீவரவாதிகளால் தனது தாயும் கொல்லப்படுவார் என்ற அச்சம் காரணமாகவே சோனியா பிரதமர் ஆவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார் என கூறினார்.

மேலும் சோனியா பிரதமராக பதவியேற்பது குறித்து அவரது இல்லத்தில் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்திற்கு மன்மோகன்சிங், குடும்ப நண்பர் சுமன்துபே,உட்பட பலர் அழைக்கப்பட்டிருந்தனர். அதன் பின்னர் மன்மோகன்சிங் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். என நட்வர்சிங் தெரிவித்தார். 2004-09 ம் ஆண்டில் ஆட்சி புரிந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் வெளியுறவுத்துறை அமைச்சராக நட்வர்சிங் பதவி வகித்தார். அப்போது ஈராக் நாட்டுடனான எண்ணெய்க்கு உணவு ஒப்பந்தத்தில் நிகழ்ந்த ஊழலை அடுத்து பதவி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தகம் வெளியிடுவது சம்பந்தமாக பிரியங்காவும் சோனியாவும் கடந்த மே மாதம் தன்னை சந்திக்க வந்ததாகவும் , மத்திய அமைச்சராக இருந்த போது தான் பலிகடாவாக்கப்பட்டது குறித்தும் தெரிவித்ததாக கூறினார். இதற்கு பதில் அளித்த சோனியா எதுவும் தனக்கு தெரியாது எனவும், அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் கூறினார்.  நட்வர்சிங்கின் கருத்து குறித்து தெரிவி்த்துள்ள கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக்சிங்வி கூறுகையில் நட்வர்சிங்கின் கருத்து உள்நோக்கம் கொண்டது. தனது புத்தகத்திற்கு விளம்பரம் கிடைக்கவே இவ்வாறு பேசியுள்ளார் என தெரிவித்துள்ளார்.

Comments
Loading...