தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ராஜஸ்தானில் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல்

ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீரில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்திய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து திருடப்பட்ட பொருட்களையும் போலீசார் மீட்டுள்ளனர்.  pushkar-couple-attacked

அஜ்மீர் நகரின் புஷ்கர் பகுதியில் தங்கியிருந்த ஸ்பெயின் மற்றும் அமெரிக்க சுற்றலாப்பயணிகள், நேற்று முன்தினம் மாலை ஆரவல்லி மலையடிவார பகுதியை பார்வையிட சென்றனர். அங்கு குடிபோதையில் இருந்த 6 இளைஞர்கள், அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.   ஸ்பெயின் பெண் வைத்திருந்த பையை பறித்தனர். இதனைத் தடுக்க முயன்ற ஸ்பெயின் பெண்ணின் கணவரை, இளைஞர்கள் தலையில் கல்லால் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த ஸ்பெயின் சுற்றுலா பயணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் தொடர்பாக அஜ்மீரை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தாக்குதல் நடத்திய கும்பலில் இருந்த சிறுவனிடம்  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   அவர்கள் மீது கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணிகளிடமிருந்து பறிக்கப்பட்ட கைப்பை, செல்ஃபோன், கிரெடிட் கார்டு உள்ளிட்டவற்றை போலீசார் மீட்டுள்ளனர்.

Comments
Loading...