தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ரிசர்வ் வங்கியின் அடுத்த ஆளுநர் குறித்த விவரம் விரைவில் : அருண் ஜேட்லி

rajan_and_jaitley_2862997fரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனின் மூன்றாண்டு பதவிக்காலம் வரும் செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது.

எனவே, இவருக்கு பதவி நீட்டிப்பு அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இன்று ரகுராம் ராஜன் தனக்கு பதவி நீட்டிப்பு வேண்டாம் என்று தெரிவித்துவிட்டார். இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறுகையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனின் சிறப்பான பணியை அரசு பாராட்டுகிறது.

அதேசமயம் அவரின் கருத்துக்கு மத்திய அரசு உரிய மதிப்பளிக்கும். மேலும் ரிசர்வ் வங்கியின் அடுத்த ஆளுநர் குறித்து மத்திய அரசு விரைவில் அறிவிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Comments
Loading...