தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ரொரன்ரோ டவுண்ரவுனில் இரண்டு கத்திக்குத்துச் சம்பவங்கள்

ரொரன்ரோ டவுண்ரவுனில் இன்று அதிகாலை இடம்பெற்ற இரண்டு கத்திக்குத்துச் சம்பவங்களில் இருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.Two_people_stabbed

முதல் கத்திக்குத்துச் சம்பவமானது Bloor மற்றும் Parliament வீதிகளுக்கு அருகில் Howard வீதியில் அதிகாலை 2.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கத்திக்குத்துக்கு இலக்கான நபரின் கழுத்து, நெஞ்சு, கால் ஆகிய பகுதிகளில் காயம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது சம்பவம் இடம்பெற்று சற்று நேரத்தில் இரண்டாவது கத்திக்குத்துச் சம்பவம் இடம்பெற்றதாகவும், கத்திக்குத்துக் காயங்களுக்க ஆளான நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. எனினும் இந்த இரு கத்திக்குத்துச் சம்வங்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து தகவல்கள் எதனையும் காவல்த்துறையினர் வெளியிடப்படவில்லை.

Comments
Loading...