Designed by Iniyas LTD
லண்டனில் மாவீரர்களின் நினைவேந்தும் ஈருருளி பேரணி!
லண்டனில் மாவீரர்களின் நினைவேந்தி செல்லும் உணர்ச்சிமிக்க ஈருருளி பேரணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கோரின்ச் பார்க் அவென்யு (Gorringe Park Avenue, Mitcham CR4 2DD) என்னும் இடத்தில் காலை 11 மணிக்கு தொடங்கிய இப்பேரணியை தமிழீழ விடுதலைக்கான மாணவர் போராட்டத்தின் அரம்பகால முதல்வர் சத்திய சீலன் துவக்கி வைத்துள்ளார். இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்துக்கொண்டுள்ளனர்.
பிரித்தானியாவில் மாவீரர் துயிலும் இல்லம் அமைக்கும் பணி உலகத் தமிழர் வரலாற்று மையத்தினால் முன்னெடுக்கப்பட்டு, அதன் முதற்கட்ட பணி தற்போது நிறைவுப் பெற்றுள்ளது. இந்நிலையில் அடுத்தக்கட்டமாக மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் நோக்கத்தில் இன்று மாவீரர்களின் நினைவு ஊர்தியும் ஈரூந்திப் பயணமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தமிழீழ ஆதரவாளார்களும் பொதுமக்களும் பெருந்திரளாக கலந்துக்கொண்ட இப்பேரணி சவுத் ஹாரோவில் (CHURCH HILL MALVAN AVENUE,SOUTH HARROW) மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.


