Designed by Iniyas LTD
லிபியா உள்நாட்டு விமானத்தை கடத்திய கடத்தல்காரர்கள் சரணடைந்தனர் : அனைத்து பயணிகளும் விடுவிப்பு
லிபியா உள்நாட்டு விமானம் ஒன்று 118 பயணிகளுடன் இன்று கடத்தப்பட்டது. கடத்தப்பட்ட இந்த விமானம் மால்டாவில் தரையிறக்கப்பட்டது. இந்த விமானத்தை 2 தீவிரவாதிகள் கடத்தியதாகவும், விமானத்தை வெடிக்க செய்து விடுவதாகவும் மிரட்டினார்.
இதனை தொடர்ந்து தீவிரவாதிகளுடன் மால்டா அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். தீவிரவாதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து முதல்கட்டமாக 65 பயணிகளை தீவிரவாதிகள் விடுவித்தனர்.
பின்னர் அனைத்து பயணிகளும் விடுத்துள்ளதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் தங்களுடைய புதிய கட்சியை பிரபலப்படுத்த விமானத்தை கடத்தியதாக கடத்தல்காரர்கள் தெரிவித்தனர்.
தன்னை அல்பாதோஅல்ஜாதித் என்ற புதிய கட்சியின் தலைவன் என கடத்தல்காரர் அறிவித்தனர். கடத்தல்காரர்கள் மல்டாவில் அரசியல் தஞ்சம் கேட்டுள்ளதாக செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
ஆனால் கடத்தல்காரர்கள் சரணடைந்ததாகவும், காவல்துறையினர் அவர்களை விசாரணைக்கு அழைத்து சென்றதாகவும் மால்டா பிரதமர் ஜோசப் மஸ்காட் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.