Designed by Iniyas LTD
லைவ் ஷோவின் போது மரணமடைந்த எழுத்தாளர்..
இந்தியா காஷ்மீரில் பெண் எழுத்தாளர் ஒருவர் டிவி லைவ் ஷோவின் போது மாரடைப்பால் மயங்கி விழுந்து மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீரில் பிரபல எழுத்தாளரான ரீட்டா ஜிஜேந்திரா காஷ்மீரில் நடைபெற்று வரும் பிரச்சனைகள் குறித்து டிவி சேனல் நடத்திய லைவ் ஷோவில் கலந்து கொண்டு பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அவர் பல சுவாரஸ்ய தகவல்களை பரிமாறிக்கொண்டிருந்தார்.
தொடர்புடைய பதிவு
நிகழ்ச்சி ரொம்ப விறுவிறுப்பாக போய்கொண்டிருந்த வேளையில் ரீட்டாவின் பேச்சில் தடுமாற்றம் ஏற்பட்டது.
இந்த நிலையில் நிலைமை என்னவென்று புரிந்து கொள்வதற்குள்ளேயே அவர் மயங்கி விழுந்துள்ளார்.
உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்தபோது, மாரடைப்பால் ஏற்கனவே இறந்துவிட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவரது இந்த திடீர் மறவு காஷ்மீர் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பன்முகத் திறமை கொண்ட எழுத்தாளர் ரீட்டாவின் மறைவிற்கு பிரபலங்கள் பலர் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றயும் குறிப்பிடத்தக்கது..