Designed by Iniyas LTD
லொத்தர் சீட்டிழுப்பு மூலம் கனடா விசா பெறும் செய்திகள் போலியானது!
லொத்தர் சீட்டிழுப்பு மூலம் 16 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு கனடா விசா வழங்க கனேடிய பாராளுமன்றத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அண்மைக்காலங்களில் செய்திகள் வந்தவாறு உள்ளன.
ஜமைக்கா, ஓமான், எத்தியோப்பியா, பிலிப்பைன்ஸ், கானா, கயானா, நைஜீரியா, கம்பியா, கமரூன், பாக்கிஸ்தான், தாய்லாந்து, உகண்டா, பிஜி மற்றும் லெசொத்தோ ஆகிய 16 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்கா லொத்தர் விசா முறைமைக்கு ஒத்ததாக , கனடாவினால் விசா வழங்கப்படும் ஒரு செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான விண்ணப்பங்களை விண்ணப்பதாரிகள் மார்ச் 1, 2017 முதல் பெற்றுக்கொள்ளலாம் எனவும், நேர்முகத் தேர்வுகள் ஆகஸ்ட் 1, 2017 முதல் நடைபெற உள்ளதாகவும் செய்திகள் உலாவருகின்றன.
இவை முற்றிலும் உண்மையற்றவை. இவ்வாறு எதுவித திட்டங்களும் கனேடிய அரசினால் அமுலாக்கப்பட்டவில்லை. கனேடிய அரசின் விசா வழங்கல் தொடர்பான தகவல்களைப் பெற ஒரே ஒரு அதிகாரபூர்வமான இணையத்தளம் கனேடியக் குடிவரவுத் திணைக்களத்தின் இணையத்தளமான www.cic.gc.caஎன்பதே ஆகும்.
கனேடிய விசா மற்றும் குடிவரவு தொடர்பான தகவல்கள் மற்றும் விண்ணப்பப் படிவங்களை குடிவரவுத் திணைக்களத்தின் இணையத்தளத்தில் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது