தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வெள்ளத்தில் மூழ்கப்போகும் டொராண்டோ! மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்

ரொரன்ரோவில் கடுமையான மழைப்பொழிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாக எதிர்வுகூறப்பட்டுள்ள நிலையில், இதற்கான முற்பாதுகாப்பு ஏற்பாடுகளை ரொரன்ரோ நகர நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.
ரொரன்ரோ ஐலண்டில் வசிப்பவர்களுக்கு வெள்ளம் மற்றும் புயல் என்பவற்றால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படின் அவர்கள் வெளியேற்றப்படுவதற்கான தயார்படுத்தல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு அச்சப்படுபவர்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கான படகுச் சேவைகள் ஒழுங்குபடுத்தப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கபபட்டுள்ளது.
இதற்கான நடவடிக்கைக் குழுவினரும் பணியாளர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், ரொரன்ரோ நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Comments
Loading...